ஆத்மமே உன் ஆண்டவரின்
Praise my Soul the King
METER : 8.7.8.7.8.7
TUNE : Dulce Carmen
PAMALAI NO.
: 1
Music
Sheet
LYRICS
1. ஆத்மமே உன் ஆண்டவரின்
திருப்பாதம் பணிந்து
மீட்பு சுகம் ஜீவன் அருள்
பெற்றதாலே துதித்து
அல்லேலூயா என்றென்றைக்கும்
நித்திய நாதரைப் போற்று.
2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
தயை நன்மைக்காய்த் துதி
கோபங்கொண்டும் அருள் ஈயும்
என்றும் மாறாதோர் துதி
அல்லேலூயா, அவர் உண்மை
மா மகிமையாம், துதி.
3. தந்தைபோல் மா தயை உள்ளோர்
நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம்கொண்டு தாங்கி
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே
அல்லேலூயா, இன்னும் அவர்
அருள் விரிவானதே.
4. என்றும் நின்றவர் சமூகம்
போற்றும் தூதர் கூட்டமே
நாற்றிசையும் நின்றெழுந்து
பணிவீர் நீர் பக்தரே
அல்லேலூயா, அனைவோரும்
அன்பின் தெய்வம் போற்றுமே