கர்த்தாவே யுக யுகமாய்


O God our help in ages past

LYRICS


1. கர்த்தாவே, யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்,
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர்.

2. உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்
உம் வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம்.

3. பூலோகம் உருவாகியே
மலைகள் தோன்றுமுன்
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன்.

4. ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே,
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே.

5. சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார்
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார்.

6. கர்த்தாவே, யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
இக்கட்டில் நற் சகாயாராய்
எம் நித்திய வீடாவீர்.