இயேசுவே நீர் தாமே


Jesu meine Freude

LYRICS


1. இயேசுவே நீர் தாமே
என் மகிழ்ச்சியாமே
நீர் என் பூரிப்பு
என் மனம் நாள் தோறும்
ஆசை வாஞ்சையோடும்
உம்மை நோக்குது
கர்த்தரே உலகிலே
உம்மையன்றி வாழ்விராது
இன்பமும் காணாது.

2. நல்மறைவின் கீழே
நான் ஒதுங்க நீரே
என் அரண்மனை
சாத்தான் வரமிக்கட்டும்
எதிரி சீறட்டும்
இயேசு என் துணை
திகிலும் பயங்களும்
பாவ நரகக் கெடியும்
இயேசுவால் தணியும்.

3. வலு சர்ப்பத்துக்கும்
சாவின் பற்களுக்கும்
நான் திடுக்கிடேன்
லோகமே விரோதி
நான் சங்கீதம் ஓதி
தோத்தரிக்கிறேன்
தெய்வ கை என் சலுகை
இனிச் சாத்தான் கூட்டத்தார்கள்
மௌனம் அடைவார்கள்

4. பொக்கிஷங்கள் யாவும்
வேணும் விருதாவும்
இயேசு என் கதி
லோகத்தார் இச்சிக்கும்
வாழ்வு குமிழிக்கும்
கானற்கும் சரி
அதை ஏன் தொடருவேன்
இயேசுவோடடைந்த தாழ்வு
பெரிதான வாழ்வு

5. மனதே நீ ஆறு
பூரிப்பாக பாடு
இயேசு சேர்ந்தாரே
அத்தால் எந்தப்பாடும்
தித்திப்பாக மாறும்
நான் உலகிலே
நிந்தையும் நிர்ப்பந்தமும்
உத்தரித்தும் இயேசு தாமே
என் மகிழ்ச்சியாமே