என் மேய்ப்பர் இயேசுகிறிஸ்துதான்


The King of Love my Shepherd is

LYRICS


1. என் மேய்ப்பர் இயேசு கிறிஸ்துதான்,
நான் தாழ்ச்சியடையேனே;
ஆட்கொண்டோர் சொந்தமான நான்
குறையடைகிலேனே.

2. ஜீவாற்றில் ஓடும் தண்ணீரால்
என் ஆத்மத் தாகம் தீர்ப்பார்;
மெய் மன்னாவாம் தம் வார்த்தையால்
நல் மேய்ச்சல் எனக்கீவார்.

3. நான் பாதை விட்டு ஓடுங்கால்
அன்பாகத் தேடிப் பார்ப்பார்;
தோள்மீதில் ஏற்றிக் காப்பதால்
மகா சந்தோஷங்கொள்வார்.

4. சா நிழல் பள்ளத்தாக்கிலே
நான் போக நேரிட்டாலும்,
உன் அன்பின் கோலைப் பற்றவே,
அதே என் வழி காட்டும்.

5. இவ்வேழைக்கும் ஓர் பந்தியை
பகைஞர்க்கெதிர் வைத்தீர்;
உம்மாவியால் என் சிரசை
தைலாபிஷேகம் செய்வீர்.

6. என் ஆயுள் எல்லாம் என் பாத்திரம்
நிரம்பி வழிந்தோடும்;
ஜீவாற்றின் நீரால் என்னுள்ளம்
நிறைந்து பொங்கிப் பாயும்.

7. என் ஜீவ காலம் முற்றிலும்
கடாட்சம் பெற்று வாழ்வேன்;
கர்த்தாவின் வீட்டில் என்றைக்கும்
நான் தங்கிப் பூரிப்பாவேன்.