நல் மீட்பர் இயேசு


How sweet the Name of Jesus sounds

LYRICS


1. நல் மீட்பர் இயேசு நாமமே
என் காதுக்கின்பமாம்
புண்பட்ட நெஞ்சை ஆற்றவே
ஊற்றுண்ட தைலமாம்.

2. அந்நாமம் நைந்த ஆவியை
நன்றாகத் தேற்றுமே;
துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை
திடப்படுத்துமே.

3. என் ரட்சகா, என் கேடகம்,
என் கோட்டையும் நீரே!
நிறைந்த அருள் பொக்கிஷம்,
அனைத்தும் நீர்தாமே.

4. மா நேசர், மேய்ப்பர், கர்த்தாவும்,
என் ஜீவனும் நீரே;
என் தீர்க்கரும், என் ராஜாவும்
ஆசாரியருமே.

5. இம்மையில் ஆயுள் முழுதும்
உம் அன்பைக் கூறுவேன்;
உம் நாமத்தால் என் சாவிலும்
நான் ஆறித் தேறுவேன்.