தூய்மை பெற நாடு


Take time to be Holy

LYRICS1. தூய்மை பெற நாடு; கர்த்தர் பாதமே
நிலைத்தவர் வார்த்தை உட்கொள்ளென்றுமே;
கூடி பக்தரோடு சோர்ந்தோர் தாங்குவாய்,
யாவிலுமே தெய்வ தயை நாடுவாய்.

2. தூய்மை பெற நாடு; லோகக் கோஷ்டத்தில்
தனித்திரு நாளும் அவர் பாதத்தில்
யேசுவைப் போலாவாய் நோக்கின் அவரை
பார்ப்போர் உன்னில் காண்பார் அவர் சாயலை.

3. தூய்மை பெற நாடு; கர்த்தர் நடத்த
என்ன நேரிட்டாலும், அவர் பின் செல்ல
இன்பம் துன்பம் நேர்ந்தும் விடாய் அவரை
நோக்கியவர் வாக்கில் வைப்பாய் நம்பிக்கை

4. தூய்மை பெற நாடு; ஆத்மா அமர்ந்து
சிந்தை செய்கை யாவும் அவர்க்குட்பட்டு,
அன்பின் ஜீவ ஊற்றைச் சேர்ந்து ருசிக்க,
முற்றும் தூய்மையாவாய் விண்ணில் வசிக்க.