உம்மைத் துதிக்கிறோம்


Praise to the Lord

LYRICS


1. உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்,
வல்ல பிதாவே
உம்மைப் பணிகிறோம் ஸ்வாமி
ராஜாதி ராஜாவே
உமது மா மகிமைக்காக கர்த்தா
ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே.

2. கிறிஸ்துவே, இரங்கும் சுதனே,
கடன் செலுத்தி
லோகத்தின் பாவத்தை நீக்கிடும்
தெய்வாட்டுக்குட்டி
எங்கள் மனு கேளும் பிதாவினது
ஆசனத் தோழா இரங்கும்.

3. நித்திய பிதாவின் மகிமையில்
இயேசுவே நீரே
பரிசுத்தாவியோடேகமாய்
ஆளுகிறீரே
ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர்
உன்னத கர்த்தரே, ஆமேன்.