காரிருளில் என் நேச


Lead Kindly Light

LYRICS


1. காரிருளில், என் நேச தீபமே,
நடத்துமேன்
வேறொளியில்லை, வீடும் தூரமே,
நடத்துமேன்
நீர் தாங்கின், தூர காட்சி ஆசியேன்;
ஓர் அடி மட்டும் என்முன் காட்டுமேன்.

2. என் இஷ்டப்படி நடந்தேன், ஐயோ;
முன்னாளிலே;
ஒத்தாசை தேடவில்லை; இப்போதோ
நடத்துமே;
உல்லாசம் நாடினேன், திகிலிலும்
வீம்புகொண்டேன், அன்பாக
மன்னியும்.

3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர்;
இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர்
நடத்திடும்;
உதய நேரம் வர, களிப்பேன்
மறைந்து போன நேசரைக் காண்பேன்.