இயேசுவே கல்வாரியில்


Jesus keep me near the Cross

LYRICS


1. இயேசுவே! கல்வாரியில்
என்னை வைத்துக்கொள்ளும்;
பாவம் போக்கும் ரத்தமாம்
திவ்விய ஊற்றைக் காட்டும்.

மீட்பரே! மீட்பரே!
எந்தன் மேன்மை நீரே;
விண்ணில் வாழுமளவும்
நன்மை செய்குவீரே.

2. பாவியேன் கல்வாரியில்
ரட்சிப்பைப் பெற்றேனே;
ஞான ஜோதி தோன்றவும்
கண்டு பூரித்தேனே.

3. ரட்சகா! கல்வாரியின்
காட்சி கண்டோனாக
பக்தியோடு ஜீவிக்க
என்னை ஆள்வீராக.

4. இன்னமும் கல்வாரியில்
ஆவலாய் நிற்பேனே;
பின்பு மோட்ச லோகத்தில்
என்றும் வாழுவேனே