கர்த்தர் என் மேய்ப்பரானவர்


The Lord's my Shepherd

LYRICS


1 கர்த்தர் என் மேய்ப்பரானவர்
நான் தாழ்ச்சி அடையேன்
பசும்புல் அமர்ந்த தண்ணீர்
அண்டை நடத்துவார்

2 அவர் என் ஆத்துமாவைத் தேற்றி
தம் நாமத்தினிமித்தம்
நீதியின் பாதையிலென்னை
நடத்திக் காக்கிறார்

3 மரண இருள் பள்ளத்தில்
நான் நடந்தாலுமே
நீர் என்னோடே இருக்கிறீர்
கோல் தடியுந் தேற்றும்

4 என் சத்ருக்களுக்கு முன்
பந்தி ஏற்படுத்தி
என் தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்வீர்

5 எப் ஜீவனுள்ள நாளெல்லாம்
நன்மை கிருபை செல்லும்
நான் கர்த்தர் வீட்டில் நீண்ட நாள்
நிலைத்து இருப்பேன்