அன்புள்ள ஸ்வாமி


Herzliebster Jesu was hast

LYRICS


1. அன்புள்ள ஸ்வாமி, நீர் நிர்ப்பந்தமாக
மரிக்கத் தீர்க்கப் பட்ட தேதுக்காக?
நீர் என்ன செய்தீர், தேவரீரின் மீது
ஏன் இந்தத் தீது

2. இவ்வாதை யாவும் உமக்கெதினாலே
உண்டாயிற்று ஐயோ என் பாவத்தாலே
அதும்மை ஸ்வாமி இத்தனை அடித்து
வதை செய்தது

3. மா ஆச்சரியம் கர்த்தர் சாக வாரார்
நல் மேய்ப்பர் மந்தைக்காக ஜீவன் தாரார்
அடியேன் தப்பக் குற்றமற்ற மீட்பர்
கடனை தீர்ப்பார்

4. இதற்கும் என் சாமர்த்தியம் போதாது
பழைய துர்க்குணம் என்னால் நீங்காது
நீர் உமதாவியை அளித்து வாரும்
பலத்தை தாரும்

5. அப்போ நான் உமதன்பினால் நிறைந்து
பூலோகக் குப்பை மேல் வெறுப்படைந்து
என் நெஞ்சை உமக்குண்மையாய்க் கொடுக்கும்
பலம் இருக்கும்