துக்கம் கொண்டாட


O come and mourn with me

LYRICS


1. துக்கம் கொண்டாட வாருமே,
பாரும்! நம் மீட்பர் மரித்தார்;
திகில் கலக்கம் கொள்ளுவோம்;
இயேசு சிலுவையில் மாண்டார்.

2. போர் வீரர், யூதர் நிந்தித்தும்,
மா பொறுமையாய்ச் சகித்தார்
நாமோ புலம்பி அழுவோம்;
இயேசு சிலுவையில் மாண்டார்.

3. மும்மணி நேரம் மாந்தர்க்காய்,
தம் மெளனத்தாலே கெஞ்சினார்;
நல் வாக்கியம் ஏழும் மொழிந்தே
இயேசு சிலுவையில் மாண்டார்.

4. சிலுவையண்டை வந்துசேர்,
நேசர் ஐங்காயம் நோக்கிப்பார்;
ஒப்பற்ற அன்பைச் சிந்தியேன்;
இயேசு சிலுவையில் மாண்டார்.

5. உருகும் நெஞ்சும் கண்ணீரும்
உள்ளன்பும் தாரும், இயேசுவே;
மாந்தர்மீதன்பு கூர்ந்ததால்
நீர் சிலுவையில் மாண்டீரே!