வாதையுற்ற மீட்பரே


Hohes heilges Marterbild

LYRICS


1. வாதையுற்ற மீட்பரே,
என் அடைக்கலம் நீரே;
நான் என் பாவப் பாரத்தால்
தொய்ந்து போய்க் கலங்கினால்,
என் அடைக்கலம் நீரே,
வாதையுற்ற மீட்பரே.

2. நியாயத் தீர்ப்பில் என் எல்லா
புண்ணியமும் விருதா;
தளரா முயற்சியால்,
மனஸ்தாபக் கண்ணீரால்
குற்றம் நீங்காதென்றைக்கும்;
கிருபைதான் ரட்சிக்கும்.


3. வாதையுற்ற மீட்பரே,
என் அடைக்கலம் நீரே,
என் இக்கட்டனைத்திலும்,
சாகும் தருணத்திலும்
என் அடைக்கலம் நீரே,
வாதையுற்ற மீட்பரே.