முன்னோரின் தெய்வமாம்


The God of Abraham Praise

LYRICS


1. முன்னோரின் தெய்வமாம்
உன்னத ராஜராம்
அநாதியானோர் அன்பராம்
மா யெகோவா
சர்வ சிருஷ்டியும்
உம் பேர் நாமம் சாற்றும்
பணிந்து போற்றுவோம் என்றும்
உம் நாமமே

2. உன்னத பரனை
தூய தூதர் சேனை
நீர் தூயர் தூயர் தூயரே
என்றிசைப்பார்
நேற்றும் இன்றும் என்றும்
இருக்கும் கர்த்தரும்
மா யெகோவா நம் பிதாவும்
துதி ஏற்பார்

3. மீட்புற்ற கூட்டமே
மா நாதர் போற்றுமே
பிதா சுதன் சுத்தாவிக்கே
துதி என்றும்
முன்னோர்க்கும் நமக்கும்
தெய்வம் ஆனோர்க்கென்றும்
வல்லமை மகத்துவமும்
உண்டாகவும்.