1. ஆ இயேசுவே உம்மாலே நான் மீட்கப்பட்டவன் உம் திவ்விய ரத்தத்தாலே நான் சுத்தமானவன் மிகுந்த கஸ்தியாலே என் தோஷத்தைத் தீர்த்தீர் உமது சாவினாலே நீர் என்னை ரட்சித்தீர்.
2. நான் உம்மால் என்றும் வாழ, இப்பந்தியில் நீரே என் ஆவிக்கேற்றதான அமிர்தம் தந்தீரே உம் ஆசீர்வாதம் ஈந்து என் பாவம் மன்னியும் அன்போடு என்னைச் சேர்த்து தயாளம் காண்பியும்.
3. நீர் இன்னும் என்னில் காணும் பொல்லாங்கு யாவையும் அகற்றிப்போட வாரும் என் நெஞ்சில் தங்கிடும் நான் உம்மைப் பற்றிக்கொள்ள கருணை புரியும்; மிகுந்த தாழ்மையுள்ள சித்தம் கடாக்ஷியும்.
4. நல் மீட்பரே, உம்மோடு நான் ஐக்கியமாகவும் நாடோறும் வாஞ்சையோடு உம்மில் நிலைக்கவும் மிகுந்த அன்பினாலே துணை செய்தருளும் தெய்வீக அப்பத்தாலே நீர் என்னைப் போஷியும்.