விருந்தைச் சேருமேன்


Come for the feast is spraed

LYRICS


1. விருந்தைச் சேருமேன்
அழைக்கிறார்
ஆகாரம் பாருமேன்
போஷிப்பிப்பார்
தாகத்தைத் தீர்க்கவும்
இயேசுவின் மார்பிலும்
சாய்ந்திளைப்பாறவும்
வா, பாவி, வா.


2. மீட்பரின் பாதமும்
சேராவிடில்,
தோல்வியே நேரிடும்
போராட்டத்தில்
இயேசுவே வல்லவர்,
இயேசுவே நல்லவர்,
இயேசுவே ஆண்டவர்;
வா, பாவி, வா.

3. மோட்சத்தின் பாதையில்
முன் செல்லுவாய்
சிற்றின்ப வாழ்வினில்
ஏன் உழல்வாய்?
வாடாத கிரீடமும்
ஆனந்தக் களிப்பும்
பேர் வாழ்வும் பெறவும்
வா, பாவி, வா.

4. சேருவேன், இயேசுவே
ஏற்றுக்கொள்வீர்
பாவமும் அறவே
சுத்தம் செய்வீர்
அப்பாலே மோட்சத்தில்
ஆனந்தக் கடலில்
மூழ்கிப் பேரின்பத்தில்
கெம்பீரிப்பேன்