சிலுவை சரிதை
In His own raiment clad
METER : 6.4.6.3
TUNE : Story of the Cross-1
PAMALAI NO.
: 410
Music
Sheet
LYRICS
I. கேள்வி
1. தம் ரத்தத்தில் தோய்ந்த
அங்கி போர்த்து,
மாதர் பின் புலம்ப
நடந்து;
2. கூடியே செல்கின்றார்
அப்பாதையே;
பின்னே தாங்குகின்றான்
சீமோனே.
3. குரூசைச் சுமந்தெங்கே
செல்லுகின்றார்?
முன் தாங்கிச் சுமக்கும்
அவர் யார்?
II. மறுமொழி
5. அவர்பின் செல்லுங்கள்
கல்வாரிக்கே,
அவர் பராபரன்
மைந்தனே
6. அவரின் நேசரே,
நின்று, சற்றே
திவ்விய முகம் உற்று
பாருமே.
7. பாதையில் செல்வோரே;
முன் ஏகிடும்
ரூபத்தில் காணீரோ
சௌந்தரியம்?
III. சிலுவை சரிதை
9. குரூசில் அறையுண்ட
மனிதனாய்
உம்மை நோக்குகின்றேன்
எனக்காய்.
10. கூர் முள் உம் கிரீடமாம்,
குரூசாசனம்;
சிந்தினீர் எனக்காய்
உம் ரத்தம்.
11. பாவி என் பொருட்டு
மாளவும் நீர்
என்னில் எந்நன்மையை
காண்கின்றீர்?
IV. சிலுவையின் அழைப்பு
12. நோவில் பெற்றேன், சேயே;
அன்பில் காத்தேன்;
நீ விண்ணில் சேரவே
நான் வந்தேன்
13. என் ரத்தம் சிந்தினேன்
உன் பொருட்டாய்
உன்னைக் கொள்ள வந்தேன்
சொந்தமாய்
14. எனக்காய் அழாதே,
அன்பின் சேயே;
போராடு, மோட்சத்தில்
சேரவே.
V. இயேசுவை நாம் வேண்டல்
15. நான் துன்ப இருளில்,
விண் ஜோதியே,
சாமட்டும் உம் பின்னே
செல்வேனே;
16. எப்பாரமாயினும்
உம் சிலுவை
நீர் தாங்கின் சுமப்பேன்
உம்மோடே.
17. நீர் என்னைச் சொந்தமாய்
கொண்டால், வேறே
யார் உம்மிலும் நேசர்
ஆவாரே?
18. இம்மையில் உம்மண்டை
நான் தங்கியே,
மறுமையில் வாழ
செய்யுமே.