பாமாலை · Hymn192
1
தற்பரா தயாபரா நின்தக்ஷணை கைப்பற்றினோம்பொற்பரா, நினைப் புகழ்ந்துபோற்றினோம் பொன் நாமமேஅற்புதம், அடைக்கலம் நீஆதரித்தனுப்புவாய்.
2
நாவினால் நமஸ்கரித்து,நாதா நினைப் பாடினோம்பாவியான பாதகரைப்பார்த்திபா கடாக்ஷித்தேஆவியால் நிரப்பி எம்மைஆசீர்வதித்தருள்வாய்.
3
நின் சரீரத்தால் எம் மாம்சம்நீதியாக்கப் பெற்றதேமன்னவா, எம்மாசும் நீக்கிமாட்சி முகம் காட்டுவைகன்னலன்ன அன்பின் ஆசிகர்த்தனே, விளம்புவாய்.
4
தந்தை முகம் என்றும் காணும்மைந்தன் இயேசு நாதனே,மந்தையாயெமை மதித்தமாசில் மணி மேசியாவிந்தை முகம் காட்டினை நீவீழ்ந்துனைப் பணிவோமே.