பாமாலை · Hymn196
பயத்தோடும் பக்தியோடும்
Let all mortal flesh keep silence
1
பயத்தோடும் பக்தியோடும்தூய சிந்தையுள்ளோராய்சபையார் அமர்ந்து நிற்க,ஆசீர்வாத வள்ளலாம்தெய்வ சுதன் கிறிஸ்து நாதர்ராஜனாய் விளங்குவார்.
2
வேந்தர்க்கெல்லாம் வேந்தர்முன்னே கன்னிமரி மைந்தனாய்பாரில் வந்து நின்றார்; இதோ,சர்வ வல்ல கர்த்தராய்வானாகாரமான தம்மால்பக்தரைப் போஷிப்பிப்பார்.
3
தூத கணங்கள் முன்சென்றுபாதை செவ்வை பண்ணவேவிண்ணினின்று அவர் தோன்றஜோதியில் மா ஜோதியாய்,வெய்யோன் கண்ட இருள் எனத்தீயோன் ராஜ்யம் மாயுமே.
4
ஆறு செட்டையுள்ள சேராப்,கண்வளரா கேரூபின்செட்டையால் வதனம் மூடி,என்றும் ஆரவாரித்துஅல்லேலூயா, அல்லேலூயா,கர்த்தா, என்று போற்றுவார்.