பாமாலை · Hymn163
அநந்த கோடி கூட்டத்தார்
See the shining countless throng
1
அநந்த கோடி கூட்டத்தார்ஆனந்த கீதம் பாடியேபண் இசைப்பார்வெண் உடையார்தெய்வாசனம் முன்னேவிண்வேந்தர் தயை போக்கிற்றேமண் மாந்தர் பாவம் நோவுமே;மேலோகிலேநீர் நோக்குவீர்உம் நாதர் மாட்சியேபாடற்ற பக்தர் சேனையேகேடோய்ந்து தூதரோடுமேபண் மீட்டுவீர்;விண்நாதர்தாம்தம் வார்த்தை நல்குவார்.
2
மா தாழ்வாய் வாழ்ந்தீர் பாரினில்,கோதற்ற வெண்மை அணிந்தீர்உம் நீதிக்காய்நம் நாதரேபொற் கிரீடம் சூட்டுவார்;பூலோக வாழ்வின் கண்ணீரைமேலோகில் ஸ்வாமி நீக்கினார்;போம் திகிலும்;உம் மீட்பரின்நல் மார்பில் சாய்குவீர்விண் வீட்டினில் மா பந்தியைமாண் வேந்தரோடு அடைந்தீர்;நீர் பெற்றீரேபேர் வாழ்வுமேகர்த்தாவோடென்றுமே.
3
ஆ, வீரர் சூரர் சேனையே,மா தீரச் செய்கை ஆற்றினீர்நீர் சகித்தீர்நீர் ஜெயித்தீர்நீர் வாழ்க, பக்தரே!மண் மாந்தர் கீர்த்தி இகழ்ந்தீர்,விண் வேந்தரோடும் சிலுவைநீர் சுமந்தீர்,நீர் அறுப்பீர்உம் கண்ணீர் பலனேமெய் மணவாட்டி, போற்றுவாய்!வையகமே முழங்குவாய்எம் ஸ்வாமியேஎன்றென்றுமேஉம் ஸ்தோத்ரம் ஏறுமே