பாமாலை · Hymn166
வான ஜோதியாய் இலங்கி
Who are these like stars
Church Eventsதிருச்சபை நிகழ்வுகள்Meter8.7.8.7.7.7TuneAll SaintsFour-part recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
வான ஜோதியாய் இலங்கிமாண்பாய்ப் பொன்முடி தாங்கிதெய்வ ஆசனமுன் நிற்பார்மாட்சியாம் இவ்வானோர் யார்?அல்லேலூயா! முழங்கும்விண்ணின் வேந்தர் துதியும்.
2
பகலோனின் ஜோதியோடுதெய்வ நீதி அணிந்துதூய வெண்மையான அங்கிஎன்றும் தூய்மை விளங்கிதூயோராய்த் தரித்தனர்எங்கிருந்து வந்தனர்?
3
ஜீவ காலம் முற்றும் மீட்பர்மேன்மைக்காய்ப் போராடினர்லோகத்தாரின் சேர்க்கை நீக்கிசாவு மட்டும் போராடிபோரில் முற்றும் நின்றனர்மீட்பராலே வென்றனர்.
4
வேதனை தம் நெஞ்சைப் பீறஓங்கு துன்பம் சூழ்ந்திடபணிந்து தம் தெய்வம் நோக்கிவேண்டலோடு போராடிஇப்போ போர் முடித்திட்டார்ஸ்வாமி கண்ணீர் நீக்கினார்.
5
சர்வ வல்லோர் சந்நிதியில்திவ்விய ஊழியத்தினில்நின்று, தேகம் ஆவியோடுகட்டளை கீழ்ப்படிந்துஉன்னதத்தில் சேர்ந்திட்டார்என்றும் தெய்வம் நோக்குவார்.
Score · இசைக் குறிப்பு
Draft · notes match the recordingHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake