பாமாலை · Hymn341
ஒன்றே தேவை என்றுரைத்தீர்
One thing's needful (Eins is noth ach Herr)
1
ஒன்றே தேவை என்றுரைத்தீர்ஸ்வாமி, அதை நாடுவேன்;என்னை உம்மிடம் அழைத்தீர்,மாய்கையை அரோசிப்பேன்;நான் உலகை எத்தனை தழுவினாலும்முழுவதும் மெத்த உழன்றறுத்தாலும்அனைத்தும் அவத்தம் ஒன்றானதை நான்அடைந்தால், நான் பூரண பாக்யவான்.
2
இதை மனிதரிடத்தில்தேடினால் கிடையாதே;இயேசு ஸ்வாமியின் வசத்தில்வாழ்வெல்லாம் இருக்குமே;என் ஆன்மாவே நீ, உன் இக்கட்டில் ஆராயும்இம்மானுவேலே பரிபூரணம் யாவும்அகப்படப் பண்ணுவார், அவரை நீஉன் பங்கும் உன் கதியுமாகப் பிடி.
3
இந்தப் பங்கையே மரியாள்தனக்குத் தெரிந்தாளே,வாஞ்சையாகிய பசியால்கிறிஸ்தின் பாதத்தருகேஇருந்து, தன் போதகர் சொன்ன தெய்வீகமொழியைத் தன் நெஞ்சில் உட்கொண்டு லெளகீகசிந்திப்பை வெறுத்துத் தன் மீட்பரையேஅடைந்ததால் மனதில் பூரித்தாளே.
4
நானும் அந்த வாஞ்சையோடுஉம்மையே, என் இயேசுவே,அண்டிக் கொண்டேன், நீர் என்னோடுஒன்றித்திடும், ஜீவனேபெருங் கூட்டத்தோடே அநேகர் சேர்ந்தாலும்,நான் உம்மையே நேசத்தால் ஆசையினாலும்தொடருவேன், உம்க்குள் யாவும் உண்டே,நீர் சொல்வது ஆவியும் ஜீவனுமே.
5
ஞானத்தின் எல்லா நிறைவும்உம்மில் இருக்கின்றது;கீழ்ப்படிகிற இசைவும்ஞானங் கற்கிறதற்குத்தாழ்வாகிய சிந்தையும் என்னில் உண்டாகநீர் எனக்குதவி செய்திடுவீராக.நன்றாக நான் உம்மையே கற்றுக் கொண்டேஅறிந்தால், நான் தேறின ஞானியாமே.