பாமாலை · Hymn342

கர்த்தர் என் பக்கமாகில்

Ist Gott fur mich so trete

Projector

Lyrics

1
கர்த்தர் என் பக்கமாகில்எனக்குப் பயம் ஏன்உபத்திரவம் உண்டாகில்மன்றாடிக் கெஞ்சுவேன்அப்போதென்மேலே வந்தபொல்லாவினை எல்லாம்பலத்த காற்றடித்ததுரும்பு போலே ஆம்.
2
என் நெஞ்சின் அஸ்திபாரம்மேலான கர்த்தரேஅதாலே பக்தர் யாரும்திடன் கொள்வார்களேநான் ஏழை பலவீனன்வியாதிப்பட்டோனேஅவரில் சொஸ்தம் ஜீவன்சமஸ்தமும் உண்டே
3
என் நீதி இயேசுதானேஅவர் இல்லாவிட்டால்பிதாவுக்குமுன் நானேமா பாவியானதால்விழிக்கவும் கூடாதேஎன் இயேசுவன்றியேரட்சிப்புக் கிடையாதேஎன் மீட்பர் அவரே
4
என் சாவு இயேசுவாலேவிழுங்கப்பட்டதுஇவர் இரக்கத்தாலேஎன் பாவக் கேட்டுக்குநான் நன்றாய் நீங்கலானேன்நான் நியாயத் தீர்ப்புக்கும்பயப்படாதோனானேன்வாழ்வெனக்கு வரும்
5
தெய்வாவி என்னில் தங்கிஎன்னை நடத்தவேபயம் எல்லாம் அடங்கிதிடனாய் மாறுதேஅப்பாவே என்று சொல்லஅவர் என் நெஞ்சுக்கேஆற்றல் சகாயம் செய்யஎன் ஆவி தேறுதே
6
என் உள்ளமே களிக்கும்துக்கிக்கவேண்டுமோகர்த்தர் என் மேல் உதிக்கும்பகலோன் அல்லவோபரத்தில் வைக்கப்பட்டஅநந்த பூரிப்பேஎன் ஆவிக்கு பலத்ததிடன் உண்டாக்குமே.
342 கர்த்தர் என் பக்கமாகில் — Tamil Pamalai