பாமாலை · Hymn349
நீர் தந்தீர் எனக்காய்
Thy Life was given for me
1
நீர் தந்தீர் எனக்காய்உம் உயிர் ரத்தமும்நான் மீட்கப்பட்டோனாய்சாகாமல் வாழவும்நீர் தந்தீர் எனக்காய்;நான் யாது தந்திட்டேன்.
2
பின்னிட்டீர் ஆண்டுகள்வேதனை துக்கமும்;நான் நித்திய நித்தியமாய்பேரின்பம் பெறவும்பின்னிட்டீர் எனக்காய்நான் யாது பின்னிட்டேன்?
3
பிதாவின் விண் வீடும்ஆசனமும் விட்டீர்;பார் இருள் காட்டிலும்தனித்தே அலைந்தீர்நீர் விட்டீர் எனக்காய்;நான் யாதெது விட்டேன்?
4
சொல்லொண்ணா வேதனைஅகோர கஸ்தியும்சகித்தீர் எனக்காய்நரகம் தப்பவும்சகித்தீர் எனக்காய்;நான் யாது சகித்தேன்?
5
கொணர்ந்தீர் எனக்காய்விண் வீட்டினின்று,மீட்பு சமூலமாய்மன்னிப்பு மா அன்புகொணர்ந்தீர் எனக்காய்;நான் யாது கொணர்ந்தேன்.
6
என் ஜீவன் தருவேன்பற்றாசை ஒழித்து;உமக்காய் ஜீவிப்பேன்யாவுமே சகித்துநீர் தந்தீர் உம்மையேநான் தந்தேன் என்னையே