பாமாலை · Hymn351

மேலோகத்தில் என் பங்கு நீர்

Whom have I Lord in heaven but Thee

Projector

Lyrics

1
மேலோகத்தில் என் பங்கு நீர்,கிறிஸ்துவே! கிறிஸ்துவே!மேலான நன்மை தேவரீர்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!நீர் பாரில் ரத்தம் சிந்தினீர்பேரன்பைக் காட்டி மரித்தீர்சீர்கெட்ட என்னை ரட்சித்தீர்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
2
பூலோக மேன்மை வாஞ்சியேன்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!மேலோக இன்பம் நாடுவேன்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!இப்பாரின் வாழ்வு நில்லாதேதப்பாமல் வாடிப்போகுமேஒப்பற்ற செல்வம் நீர் நீரேகிறிஸ்துவே! கிறிஸ்துவே!
3
நீர் ஏழையேனைக் கைவிடீர்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!சீராகக் காத்து ஆளுவீர்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!பொன் வெள்ளி ஆஸ்தி போயினும்துன்புற்றுப் பாடுபடினும்என் விசுவாசம் நிலைக்கும்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
4
தீயோன் விரோதம் செய்யினும்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!ஓயாமலே போராடினும்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!அம்மூர்க்கம் கண்டு அஞ்சிடேன்உம்மாலே வெற்றி சிறப்பேன்கெம்பீர கீதம் பாடுவேன்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
5
வெம் சாவையும் மேற்கொள்ளுவேன்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!உம் நேச மார்பில் சுகிப்பேன்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!பேரன்பரே! கை தாங்குவீர்நீர் விண்ணில் சேர்த்து வாழ்விப்பீர்ஓயாப் பேரின்பம் ஈகுவீர்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
351 மேலோகத்தில் என் பங்கு நீர் — Tamil Pamalai