பாமாலை · Hymn564
பல்லவி
கிரியைகள் மட்டும் கிரியைகள் மட்டும்கிரியைகள் மட்டும் நினைக்கப் படும்;புவியில் நம் வேலை ஓய்ந்திடும் நாளில்கிரியைகள் மட்டும் நினைக்கப் படும்.
1
ஜோதியாய் ஆதித்தன் தோன்றிடும் நேரம்விண்மீன்கள் தேய்ந்து பின் மாய்ந்து விடும்அவ்விதம் நம் வேலை ஓய்ந்திடும் நாளில்கிரியைகள் மட்டும் நினைக்கப் படும்.
↻ பல்லவி
2
மற்றோர் நம் ஸ்தானம் வகித்திடும் நாளில்நினைவு கூர்வரோ நம் நாமமும்பிறர் நாம் நடும் பயிர் கொய்யும் போழ்தில்கிரியைகள் மட்டும் நினைக்கப் படும்.
↻ பல்லவி
3
ஜீவிய நாட்களில் கூறிய உண்மைபூவில் விதைத்திட்ட விதைகளும்நம்மை மறந்திடும் நாள் வருங்காலைகிரியைகள் மட்டும் நினைக்கப் படும்.
↻ பல்லவி
4
மீட்பர் தம் சம்பத்தைச் சேர்க்கும் அந்நாளில்ஜெய கிரீடங்கள் சூடுகையில்சோர்வுற்ற உத்தம சீஷர்க்கு விண்ணில்கிரியைகள் மட்டும் நினைக்கப் படும்.
↻ பல்லவி