பாமாலை · Hymn137

கர்த்தாவின் சுத்த ஆவியே

O Holy Spirit enter in (O heilger Geist )

Projector

Lyrics

1
கர்த்தாவின் சுத்த ஆவியேநீர் எங்கள் ஆத்துமாவிலேஇறங்கி வாசம் பண்ணும்பரம ஜோதியாகியஉம்மாலே நாங்கள் சீர்ப்படதெளிந்த நெஞ்சும் கண்ணும்தந்து, வந்துமெய் ஜெபத்தை, நற்குணத்தைபோதித்தீயும்;மெய்ச் சந்தோஷத்தை அளியும்.
2
நீர் போதிக்கும் நல் வார்த்தையேஎப்போதும் எங்கள் நெஞ்சிலேமெய்த் தீபமாவதாகபிதா சுதன் இருவரால்இறங்கும் உம்மையும் அதால்திரியேக தெய்வமாக,நல்ல, வல்லகனிவோடும் பணிவோடும்போற்றிப் பாடும்வாக்கை எங்களுக்குத் தாரும்.
3
நல்லோர் அடைகிற எல்லாமெய் ஞானத்துக்கும் காரணாநீர் எங்கள்மேலே வாரும்மற்றோருக்கும் சன்மார்க்கத்தைஅன்பாகக் காட்டும் ஆவியைநீர் எங்களுக்குத் தாரும்நாட்டில், காட்டில்தேசமெங்கும் பொய் அடங்கும்நாள் உண்டாகஉம்மால் மெய் பலப்பதாக.
4
வழித்துணையாம் கர்த்தரே,நல் யோசனை அறியோமே,நீரே வழியைக் காட்டும்எல்லா உபத்ரவத்திலும்திடம் நிலைவரத்தையும்அளித்து முசிப்பார்றும்வாரும், பாரும்;கை சலித்துக் கட்டுவிட்டுபோன யாவும்சீர்ப்பட சகாயம் தாரும்
5
ஜீவாவி, நாங்கள் இயேசுவின்பிரிய சுவிசேஷத்தின்பேரின்பத்தால் நிறைந்துரட்சிப்பின் நீளம் அகலம்தெய்வன்பின் ஆழம் உயரம்ஏதென்றுணர்வடைந்து,பாவம், சாபம்,வென்ற கர்த்தா எங்கள் பர்த்தாஎன்றறியும்திட நிச்சயம் அளியும்.
6
கற்போடு எங்கள் நாட்களைகழிக்க எங்கள் ஆவியைபலப்படுத்த வாரும்பொல்லாத ஆசை இச்சையைவிலக்கி, அது எங்களைதீண்டாதபடி காரும்வான, ஞானவாழ்வை நாடும் சீரைத் தாரும்மோட்சம் காட்டும்அதால் எங்கள் நெஞ்சை ஆற்றும்
137 கர்த்தாவின் சுத்த ஆவியே — Tamil Pamalai