பாமாலை · Hymn136

வாஞ்சைப்பட்ட இயேசுவே

Hail that day that sees Him rise

Projector

Lyrics

1
வாஞ்சைப்பட்ட இயேசுவே, அல்லேலூயா!இந்தப் பூதலத்திலே அல்லேலூயா!கொஞ்ச நாள் தன தங்கினீர்; அல்லேலூயா!பின்பு மோட்சம் ஏகினீர், அல்லேலூயா!
2
வான ஆசனத்திலே அல்லேலூயா!வீற்றிருந்து நித்தமே அல்லேலூயா!துதி பெரும் தேவரீர் அல்லேலூயா!பூதளத்தை மறவீர் அல்லேலூயா!
3
திருக்கரம் குவித்து அல்லேலூயா!திருக்கரம் காண்பித்து அல்லேலூயா!திருவாய் மலர்ந்து நீர் அல்லேலூயா!மாந்தரக்காய் மன்றாடுவீர் அல்லேலூயா!
4
மண்ணைவிட்டுப் பிரிந்தும் அல்லேலூயா!வான லோகம் போயினும் அல்லேலூயா!எங்கள் ஜெபம் கேளுமே அல்லேலூயா!எங்கள் நெஞ்சில் தங்குமே அல்லேலூயா!
136 வாஞ்சைப்பட்ட இயேசுவே — Tamil Pamalai