பாமாலை · Hymn139

தெய்வாவி மனவாசராய்

Spirit Divine attend our prayers

Projector

Lyrics

1
தெய்வாவி, மனவாசராய்,வந்தனல் மூட்டுவீர்;உம் அடியாரின் உள்ளத்தில்மா கிரியை செய்குவீர்.
2
நீர் சோதிபோல் பிரகாசித்து,நிர்ப்பந்த ஸ்திதியும்என் கேடும் காட்டி, ஜீவனாம்மெய்ப் பாதை காண்பியும்.
3
நீர் வான அக்னிபோலவே,துர் ஆசை சிந்தையும்தீக் குணமும் சுட்டெரிப்பீர்,பொல்லாத செய்கையும்.
4
நற் பனிபோலும் இறங்கும்இவ்வேற்ற நேரத்தில்;செழிப்புண்டாகச் செய்திடும்பாழான நிலத்தில்.
5
புறாவைப்போல சாந்தமாய்நீர் செட்டை விரிப்பீர்;மெய்ச் சமாதானம் ஆறுதல்நற் சீரும் அருள்வீர்.
139B தெய்வாவி மனவாசராய் · Grafernberg — Tamil Pamalai