பாமாலை · Hymn187
உம் அருள் பெற இயேசுவே
I am not worthy holy Lord
Communionதிருவிருந்துMeterC. MTuneLeicesterFour-part recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
உம் அருள் பெற, இயேசுவே,நான் பாத்திரன் அல்லேன்;என்றாலும் தாசன் பேரிலேகடாக்ஷம் வையுமேன்.
2
நீர் எனக்குள் பிரவேசிக்கநான் தக்கோன் அல்லவேநீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்கநிமித்தம் இல்லையே.
3
ஆனாலும் வாரும் தயவாய்,மா நேச ரக்ஷகா;என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய்என் பாவ நாசகா.
4
நற்கருணையாம் பந்திக்கும்அபாத்திரன் ஆயினேன்நற் சீரைத் தந்து என்னையும்கண்ணோக்கிப் பாருமேன்.
5
தெய்வீக பான போஜனம்அன்பாக ஈகிறீர்;மெய்யான திவ்விய அமிர்தம்உட்கொள்ளச் செய்கிறீர்.
6
என் பக்தி, ஜீவன் இதினால்நீர் விர்த்தியாக்குமேன்;உந்தன் சரீரம் இரத்தத்தால்சுத்தாங்கம் பண்ணுமேன்.
7
என் ஆவி, தேகம், செல்வமும்நான் தத்தம் செய்கிறேன்;ஆ இயேசுவே, சமஸ்தமும்பிரதிஷ்டை செய்கிறேன்.
Score · இசைக் குறிப்பு
Draft · read by computerHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake