பாமாலை · Hymn223
கர்த்தா உம் மாட்சி
Thine Arm O Lord in days of old
1
கர்த்தா உம் மாட்சி கரத்தால்நோய் சாவும் நீங்கிற்றேசுத்தாங்க சுகம் ஜீவனும்உம் வார்த்தை நல்கிற்றேஅந்தகர் ஊமை செவிடர்நிர்ப்பந்தராம் குஷ்டர்,நொந்த பல்வேறு ரோகஸ்தர்நாடோறும் வந்தனர்.
2
மா வல்ல கரம் தொடவேஆரோக்கியம் பெற்றனர்பார்வை நற்செவி பேச்சுமேபெற்றே திரும்பினர்;மா வல்ல நாதா, இன்றுமேமறுகும் ரோகியும்சாவோரும் தங்கும் சாலையில்ஆரோக்கியம் அளியும்.
3
ஆரோக்கிய ஜீவ நாதரேநீரே எம் மீட்பராய்ஆரோக்கியம் ஜீவன் சீருமேஅருளும் தயவாய்;சரீரம் நற்சீர் நிறைந்துஉம் மக்கள் யாவரும்சன்மார்க்க ஞானம் உள்ளோராய்உம்மைத் துதிக்கவும்.