பாமாலை · Hymn60
ஓ பெத்லகேமே சிற்றூரே
O little town of Bethlehem
1
ஓ பெத்லகேமே சிற்றூரேஎன்னே உன் அமைதிஅயர்ந்தே நித்திரை செய்கையில்ஊர்ந்திடும் வான்வெள்ளிவிண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றேஉன் வீதியில் இன்றேநல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்உன் பாலன் இயேசுவே.
2
கூறும், ஓ விடி வெள்ளிகாள்இம்மைந்தன் ஜன்மமேவிண் வேந்தர்க்கு மகிமையே,பாரில் அமைதியாம்;மா திவ்விய பாலன் தோன்றினார்மண் மாந்தர் தூக்கத்தில்,விழித்திருக்க தூதரும்அன்போடு வானத்தில்
3
அமைதியாய் அமைதியாய்விண் ஈவு தோன்றினார்மாந்தர்க்கு ஸ்வாமி ஆசியும்அமைதியால் ஈவார்கேளாதே அவர் வருகைஇப்பாவ லோகத்தில்;மெய் பக்தர் ஏற்பார் ஸ்வாமியைதம் சாந்த ஆன்மாவில்
4
வேண்ட நற் சிறு பாலரும்இத் தூய பாலனைஅழைக்க ஏழை மாந்தரும்இக்கன்னி மைந்தனைவிஸ்வாசமும் நம் பாசமும்வரவைப் பார்க்கவே,இராவை நீக்கித் தோன்றுவார்இம்மாட்சி பாலனே.
5
பெத்லெகேம் தூய பாலனேஇறங்கி வருவீர்;ஜனிப்பீர் எங்களில் இன்றும்எம் பாவம் நீக்குவீர்;நற்செய்தி இவ்விழாதன்னில்இசைப்பார் தூதரே;ஆ வாரும், வந்து தங்கிடும்இம்மானுவேலரே.