பாமாலை · Hymn264

நல் மீட்பர் இயேசு

How sweet the Name of Jesus sounds

Projector

Lyrics

1
நல் மீட்பர் இயேசு நாமமேஎன் காதுக்கின்பமாம்புண்பட்ட நெஞ்சை ஆற்றவேஊற்றுண்ட தைலமாம்.
2
அந்நாமம் நைந்த ஆவியைநன்றாகத் தேற்றுமே;துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தைதிடப்படுத்துமே.
3
என் ரட்சகா, என் கேடகம்,என் கோட்டையும் நீரே!நிறைந்த அருள் பொக்கிஷம்,அனைத்தும் நீர்தாமே.
4
மா நேசர், மேய்ப்பர், கர்த்தாவும்,என் ஜீவனும் நீரே;என் தீர்க்கரும், என் ராஜாவும்ஆசாரியருமே.
5
இம்மையில் ஆயுள் முழுதும்உம் அன்பைக் கூறுவேன்;உம் நாமத்தால் என் சாவிலும்நான் ஆறித் தேறுவேன்.
264 நல் மீட்பர் இயேசு — Tamil Pamalai