பாமாலை · Hymn258
இயேசுவே உம்மை தியானித்தால்
Jesus the very thought of Thee
1
இயேசுவே உம்மை தியானித்தால்உள்ளம் கனியுமேகண்ணார உம்மைக் காணுங்கால்பரமானந்தமே.
2
மானிட மீட்பர் இயேசுவின்சீர் நாமம் போலவேஇன் கீத நாதம் ஆய்ந்திடின்உண்டோ இப்பாரிலே?
3
நீர் நொறுங்குண்ட நெஞ்சுக்குநம்பிக்கை ஆகுவீர்நீர் சாந்தமுள்ள மாந்தர்க்குசந்தோஷம் ஈகுவீர்.
4
கேட்போர்க்கும் தேடுவோர்க்கும் நீர்ஈவீர் எந்நன்மையும்கண்டடைந்தோரின் பாக்கியசீர்யார் சொல்ல முடியும்?
5
இயேசுவின் அன்பை உணர்ந்துமெய் பக்தர் அறிவார்அவ்வன்பின் ஆழம் அளந்துமற்றோர் அறிந்திடார்
6
இயேசுவே, எங்கள் முக்தியும்பேரின்பமும் நீரேஇப்போதும் நித்திய காலமும்நீர் எங்கள் மாட்சியே.