பாமாலை · Hymn46
இம்மானுவேலே வாரும்
O come O come Emmanuel
1
இம்மானுவேலே வாரும், வாருமே,மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே;மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும்உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும்மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே,இம்மானுவேலின் நாள் சமீபமே.
2
ஈசாயின் வேர்த் துளிரே, வாருமே,பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே;பாதாள ஆழம் நின்று ரட்சியும்,வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும்.
3
அருணோதயமே, ஆ, வாருமே,வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே;மந்தார ராவின் மேகம் நீக்கிடும்,இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும்.
4
தாவீதின் திறவுகோலே, வாருமே,விண் வாசலைத் திறந்து தாருமே;ஒடுக்கமாம் நல் வழி காத்திடும்,விசாலமாம் துர்ப் பாதை தூர்த்திடும்.
5
மா வல்ல ஆண்டவா, வந்தருளும்;முற்காலம் சீனாய் மலைமீதிலும்எக்காளம் மின்னலோடு தேவரீர்பிரமாணம் இஸ்ரவேலுக்களித்தீர்.