பாமாலை · Hymn45

மகிழ்ச்சி ஓய்வுநாளே

O Day of rest and gladness

Projector

Lyrics

1
மகிழ்ச்சி ஓய்வுநாளேபூரிப்பு ஜோதியாம்கவலை துக்கம் போக்கும்மா பாக்கிய நல்நாளாம்மாந்தர் குழாம் இந்நாளில்சேர்ந்தே ஆராதிப்பார்மா தூயர் தூயர் தூயர்திரியேகர் பணிவார்.
2
முதலாம் சிஷ்டி ஜோதிஇந்நாளில் தோன்றிற்றேதம் சாவை வென்று மீட்பர்இந்நாள் எழுந்தாரேதம் ஆவி வெற்றி வேந்தர்இந்நாளில் ஈந்தாரேஆ! மாட்சியாம் இந்நாளில்மூவொளி வந்ததே.
3
இப்பாழ் வனாந்தரத்தில்நீ திவ்விய ஊற்றேயாம்உன்னின்று மோட்சம் நோக்கும்பிஸ்கா சிகரமாம்ஆ! எம்மை முசிப்பாற்றும்நல் அன்பாம் நாள் இதுமண்ணின்று விண்ணில் ஏற்றும்புத்துயிர் நாள் இது.
4
செல்வோம் புத்தருள் பெற்றுஇவ்வோய்வு நாளிலேமெய்பக்தர் மோட்ச லோகமா பாக்கிய ஓய்வுக்கேபிதா சுதன் சுத்தாவிஎம் ஸ்தோத்ரம் பெறுவீர்சபையின் நாவால் கீதம்திரியேகரே ஏற்பீர்.
45 மகிழ்ச்சி ஓய்வுநாளே — Tamil Pamalai