பாமாலை · Hymn48

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

Gott sei Dank in aller welt

Projector

Lyrics

1
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!மீட்போம் என்ற வாசகம்தப்பில்லாமல் நாதனார்மீட்பரை அனுப்பினார்.
2
முற்பிதாக்கள் யாவரும்தீர்க்கதரிசிகளும்சொல்லி ஆசைப்பட்டதுவந்து நிறைவேறிற்று.
3
வாழ்க, என் வெளிச்சமே!ஓசியன்னா, ஜீவனே!என் இருதயத்திலும்தயவாய் பிரவேசியும்.
4
நீர் சாதுள்ள தயவாய்வந்தீர்; அந்த வண்ணமாய்இப்போதென்மேல் மெத்தவும்நீண்ட சாந்தமாயிரும்.
5
சாத்தான் வெகு சர்ப்பனைசெய்துமே என் மனதைநீர் எல்லா பயத்திலும்ஆற்றித் தேற்றிக்கொண்டிரும்.
6
மீண்டும் நீர் வருகையில்ஜீவாதிபதி, என்னில்உந்தன் திவ்விய சாயலும்காணக் கட்டளையிடும்.
48 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் — Tamil Pamalai