பாமாலை · Hymn113
ரட்சகரான இயேசுவே
1
ரட்சகரான இயேசுவே,எங்களை மீட்க நீர்சுகந்த பலியாகவேஜீவனைக் கொடுத்தீர்.
2
கெட்டோரைச் சேர்த்து, பாவத்தைகட்டோடே நீக்கிடும்;இப்போது பாவ மன்னிப்பைஎல்லார்க்கும் ஈந்திடும்.
3
பாவத்தை நாசமாக்கவேகால் காயப்பட்டதுகெட்டோரை ஏற்றுக்கொள்ளவேகை நீட்டப்பட்டது.
4
செந்நீர் நிறைந்த காயங்கள்சுமந்த கர்த்தனேஎன்னால் விளைந்த பாவங்கள்எல்லாம் அகற்றுமே.
5
உமது வாக்கை ரூபிக்கரத்தத்தால் என்னையும்கழுவி, உம்மைச் சேவிக்ககிருபை அளியும்.