பாமாலை · Hymn116

உம் ராஜ்யம் வருங்காலை

Lord when Thy Kingdom comes

Projector

Lyrics

1
உம் ராஜ்யம் வருங் காலை கர்த்தரேஅடியேனை நினையும் என்பதாய்சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலேவிண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய்.
2
அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார்எவ்வடையாளமும் கண்டிலாரே;தம் பெலனற்ற கையை நீட்டினார்;முட்கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே.
3
ஆனாலும், மாளும் மீட்பர் மா அன்பாய்அருளும் வாக்கு, ‘இன்று என்னுடன்மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்’என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன்.
4
கர்த்தாவே, நானும் சாகும் நேரத்தில்,‘என்னை நினையும்’ என்று ஜெபித்தேஉம் சிலுவையை, தியானம் செய்கையில்,உம் ராஜியத்தைக் கண்ணோக்கச் செய்யுமே.
5
ஆனால், என் பாவம் நினையாதேயும்,உம் ரத்தத்தால் அதைக் கழுவினீர்;உம் திரு சாவால் பாவமன்னிப்பும்ரட்சிப்பும் எனக்காய்ச் சம்பாதித்தீர்.
6
’என்னை நினையும்’, ஆனால், உமக்கும்என்னால் உண்டான துன்பம் கொஞ்சமோ?சிலுவை, நோவு, ரத்த வேர்வையும்,சகித்த நீர், இவை மறப்பீரோ?
7
’என்னை நினையும்’, நான் மரிக்கும் நாள்‘நீயும் என்னோடு தங்குவாய் இன்றேநற்பரதீஸில்’ என்னும் உம் வாக்கால்என் ஆவி தேர்ந்து மீளச் செய்யுமே
116 உம் ராஜ்யம் வருங்காலை — Tamil Pamalai