பாமாலை · Hymn131
வாழ்க பாக்கிய காலை
Welcome happy morn
பல்லவி
”வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார்இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்;
1
”வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார்இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்;மாண்டோர் ஜீவன் பெற்றீர், நித்திய தெய்வமாம்உம்மை சிஷ்டி யாவும் தாழ்ந்து சேவிக்கும்.
↻ பல்லவி
2
நீர் எம் மீட்பர், கர்த்தர், ஜீவன் சுகமாம்நீர் பிதாவின் திவ்விய ஏக சுதனம்நரர் சுபாவம் போக்க கிருபை பூண்டீர்மாந்தர் மீட்படைய மானிடன் ஆனீர்.
↻ பல்லவி
3
ஜீவ காரணர் நீர் சாவுக்குட்பட்டீர்மீட்பின் பலம் காட்ட பாதாளம் சென்றீர்;‘இன்று மூன்றாம் நாளில் எழுந்திருப்பேன்’என்று சொன்ன வாக்கை நின்று காருமேன்.
↻ பல்லவி
4
பேயால் கட்டுண்டோரின் சிறை நீக்குமே,வீழ்ந்தோர் யார்க்கும் புனர் ஜீவன் தாருமே;மாந்தர் யார்க்கும் ஜோதி முகம் காட்டுமேஉமதொளி தந்து எம்மைக் காருமே
↻ பல்லவி