பாமாலை · Hymn168

வெள்ளங்கி பூண்டு மாட்சியாய்

How bright these glorious spirits shine

Projector

Lyrics

1
வெள்ளங்கி பூண்டு மாட்சியாய்நிற்கும் இப்பாக்கியர் யார்?சதா சந்தோஷ ஸ்தலத்தைஎவ்வாறு அடைந்தார்?
2
மிகுந்த துன்பத்தினின்றேஇவர்கள் மீண்டவர்,தம் அங்கி கிறிஸ்து ரத்தத்தில்தூய்மையாய்த் தோய்த்தவர்
3
குருத்தோலை பிடித்தோராய்விண் ஆசனமுன்னர்செம்ஜோதியில் தம் நாதரைஇப்போது சேவிப்பர்.
4
வெம் பசி, தாகம் வெய்யிலும்சற்றேனும் அறியார்;பகலோனாக ஸ்வாமிதாம்நற்காந்தி வீசுவார்.
5
சிங்காசனத்தின் மத்தியில்விண் ஆட்டுக்குட்டிதாம்மெய் அமிர்தத்தால் பக்தரைபோஷித்துக் காப்பாராம்.
6
நல் மேய்ச்சல், ஜீவ தண்ணீர்க்கும்அவர் நடத்துவார்;இவர்கள் கண்ணீர் யாவையும்கர்த்தர்தாம் துடைப்பார்.
7
நாம் வாழ்த்தும் ஸ்வாமியாம் பிதா,குமாரன் ஆவிக்கும்,நீடூழி காலமாகவேதுதி உண்டாகவும்.
168 வெள்ளங்கி பூண்டு மாட்சியாய் — Tamil Pamalai