பாமாலை · Hymn73

ராஜன் தாவீதூரிலுள்ள

Once in royal David's city

Projector

Lyrics

1
ராஜன் தாவீதூரிலுள்ளமாட்டுக் கொட்டில் ஒன்றிலேகன்னி மாதா பாலன் தன்னைமுன்னணையில் வைத்தாரேமாதா மரியம்மாள்தான்பாலன் இயேசு கிறிஸ்துதான்.
2
வானம் விட்டுப் பூமி வந்தார்,மா கர்த்தாதி கர்த்தரே,அவர் வீடோமாட்டுக்கொட்டில்,தொட்டிலோ முன்னணையே,ஏழையோடு ஏழையாய்வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்.
3
ஏழையான மாதாவுக்குபாலனாய்க் கீழ்ப்படிந்தார்பாலிய பருவம் எல்லாம் அன்பாய்பெற்றோர்க்கு அடங்கினார்அவர்போல் கீழ்ப்படிவோம்சாந்தத்தோடு நடப்போம்.
4
பாலர்க்கேற்ற பாதை காட்டபாலனாக வளர்ந்தார்பலவீன மாந்தன்போலதுன்பம் துக்கம் சகித்தார்இன்ப துன்ப நாளிலும்துணைசெய்வார் நமக்கும்.
5
நம்மை மீட்ட நேசர்தம்மைகண்ணால் கண்டு களிப்போம்அவர்தாமே மோக்ஷ லோகநாதர் என்று அறிவோம்பாலரை அன்பாகவேதம்மிடத்தில் சேர்ப்பாரே.
6
மாட்டுத் தொழுவத்திலல்லதெய்வ ஆசனத்திலும்ஏழைக்கோலமாக அல்லராஜ கிரீடம் சூடியும்மீட்பர் வீற்றிருக்கின்றார்,பாலர் சூழ்ந்து போற்றுவார்.
73 ராஜன் தாவீதூரிலுள்ள — Tamil Pamalai