பாமாலை · Hymn167
விஸ்வாசத்தோடு சாட்சி
For all the saints
1
விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தேதம் வேலை முடித்தோர் நிமித்தமே,கர்த்தாவே, உம்மைத் துதி செய்வோம்அல்லேலூயா! அல்லேலூயா!
2
நீர் அவர் கோட்டை, வல் கன்மலையாம்நீர் யுத்தத்தில் சேனைத் தலைவராம்நீர் காரிருளில் பரஞ்சோதியாம்,அல்லேலூயா! அல்லேலூயா!
3
செவ்வானம் மேற்கில் தோன்றி ஒளிரும்மெய் வீரருக்கு ஓய்வு வாய்த்திடும்,சீர் பரதீசில் பாக்கியம் அமையும்அல்லேலூயா! அல்லேலூயா!
4
மேலான பகல் பின் விடியும் பார்!வென்றோர் கெம்பீரமாய் எழும்புவார்மாண்புறும் ராஜா முன்னே செல்லுவார்,அல்லேலூயா! அல்லேலூயா!
5
அநந்த கூட்டம் நாற்றிசை நின்றும்திரியேகருக்கு ஸ்தோத்ரம் பாடியும்விண் மாட்சி வாசலுள் பிரவேசிக்கும்அல்லேலூயா! அல்லேலூயா!