பாமாலை · Hymn197

பிதாவே எங்களை

And now O Father mindful of Thy Love

Projector

Lyrics

1
பிதாவே, எங்களை கல்வாரியில்நீர் மீட்ட அன்பை நாங்கள் உணர்ந்தே,நரர்க்காய் விண்ணில் உம் சமுகத்தில்பரிந்து பேசும் கிறிஸ்துவுடனேஒரே மெய்யான பலி படைப்போம்இங்கே அதை உம்முன் பாராட்டுவோம்.
2
ஆ, எங்கள் குற்றம் குறை யாவையும்பாராமல் கிறிஸ்து முகம் நோக்குமேவிஸ்வாஸம் மங்கி, ஜெபம் குன்றியும்உம் பேரருளைப் போக்கடித்தோமேஎன்றாலும், எங்கள் பாவம் ஆக்கினைஇடையில் வைத்தோம் மீட்பர் புண்ணியத்தை.
3
இவ்வேளை எங்கள் நண்பர்க்காகவும்உம் சன்னிதானம் வேண்டல் செய்வோமே;சிறந்த நன்மை யாவும் அளியும்;உம் மார்பினில் அணைத்துக் காருமே;எத்தீங்கும் அணுகாமல் விலக்கும்;உம்மில் நிலைக்கப் பெலன் அருளும்.
4
இவ்வாறு அண்டினோம் உம் சரணம்மா சாந்தமுள்ள மீட்பரான நீர்பேரின்பம் தருந் திவ்விய போஜனம்கொடுப்பதாலும் தீமை நீக்குவீர்உற்சாகத்தோடு உம்மை என்றைக்கும்சேவித்துப் பற்றத் துணை புரியும்
197 பிதாவே எங்களை — Tamil Pamalai