பாமாலை · Hymn269

மனு சுதா எம் வீரா

O Son of Man our Hero

Projector

Lyrics

1
மனு சுதா, எம் வீரா, வல்ல அன்பா!உம் தொண்டரே இப்பாரில் தீரராம்;எம் இன்பம் துன்பம் சகிக்கும் மா நண்பா!உமக்கு நாங்கள் ஜீவ பலியாம்.
2
மா கஷ்ட பாதை சென்றீர் தேவரீரே,சத்திய வார்த்தை நீர் அருளினீர்;அன்போடு காட்டுப் புஷ்பம் வியந்தீரே,வாலிபர் வீரம் கண்டே மகிழ்ந்தீர்.
3
பாலியர் போதகா, இளைஞர் நேசா!மாந்தரின் வேந்தர் ஊழியனும் நீர்;நம்பிக்கை ஆறுதல் இன்பத்தின் நாதா!எம் நோக்கம் இன்பம் பயம் ஆளுவீர்.
4
ஆறுதல் ஈயும் அன்பரை அண்டுவோம்,எம்மோடிரும் எம் தோல்வி துன்பிலும்;செல்வர் விருந்தா! இன்பத்தில் வேண்டுவோம்!இல்லார் நல் தோழா, தாழ்வில் தங்கிடும்.
269 மனு சுதா எம் வீரா — Tamil Pamalai