பாமாலை · Hymn268
மகா அருளின் ஜோதியை
How bright appears (Wie schon leucht)
1
மகா அருளின் ஜோதியைவீசிடும் வெள்ளி எத்தனைபிரகாசமாய் விளங்கும்தாவீதின் மைந்தன் இயேசுவேநீரே என் மணவாளனேஎன் பொக்கிஷம் என் பங்கும்முற்றும் சுற்றும்தயவாலும் உண்மையாலும்நீர் நிறைந்தோர்மேன்மை நாமமும் அடைந்தோர்.
2
சிநேகமுள்ள பார்வையால்அடியேனை நீர் நோக்கினால்பரம் வெளிச்சம் காட்டும்நீர் சொல்லும் இன்ப சொற்களும்தரும் சரீரம் ரத்தமும்என் ஆத்துமத்தை ஆற்றும்தேற, சேரகிட்டும் என்னை நற்றிடனைத்தந்தே தேற்றும்அன்புமாய் அரவணையும்.
3
பிதாவே நீர் அநாதியில்என் பேரிலே குமாரனில்சிநேகம் வைத்த கர்த்தா;குமாரன் என்னைத் தமக்கேமனைவி என்றன்புடனேதெரிந்து கொண்ட பர்த்தாமெத்த கெட்டபாவியான என்னைவானகர்த்தர்தாமேநோக்கினதிரக்கமாமே.
4
கிண்ணரம், யாழும் வீணையும்சங்கீத வாத்தியங்களும்களிப்பாய்த் தொனிக்கட்டும்அன்புள்ள இயேசுவுடனேநான் என்றென்றைக்கும் வாழ்வதேஎன் ஆவியை எழுப்பும்ஆடி, பாடி,கிறிஸ்துதாமே நேசராமேஎன்று ஓதும்சந்தம் இன்பமே எப்போதும்.
5
மகிழ்வேன் என் சிநேகிதர்அல்பா ஒமேகா என்பவர்,என் நேசர் ஆதியந்தம்இனி மோட்சானந்தத்திலேநான் அவரண்டை சேர்வேனேஎன் பாக்கியம் அநந்தம்ஆமேன், ஆமேன்,வா, ரட்சிப்போ, வா கெலிப்போஉனக்காகவாஞ்சிப்பேன் நான் சேர்வாயாக.