பாமாலை · Hymn298
ஆராய்ந்து பாரும்
Search me O God my actions try
1
ஆராய்ந்து பாரும், கர்த்தரே;என் செய்கை யாவையும்நீர் காணுமாறு காணவேஎன்னில் பிரகாசியும்.
2
ஆராயும் எந்தன் உள்ளத்தை,நீர் சோதித்தறிவீர்;என் அந்தரங்க பாவத்தைமா தெளிவாக்குவீர்
3
ஆராயும் சுடரொளியால்துராசை தோன்றவும்;மெய் மனஸ்தாபம் அதனால்உண்டாக்கியருளும்.
4
ஆராயும் சிந்தை, யோசனைஎவ்வகை நோக்கமும்அசுத்த மனோபாவனைஉள்ளிந்திரியங்களும்.
5
ஆராயும் மறைவிடத்தைஉம் தூயக் கண்ணினால்;அரோசிப்பேன் என் பாவத்தைஉம் பேரருளினால்.
6
இவ்வாறு நீர் ஆராய்கையில்சாஷ்டாங்கம் பண்ணுவேன்;உம் சரணார விந்தத்தில்பணிந்து போற்றுவேன்.