பாமாலை · Hymn346

தந்தை தன் சிறு

As helpless as a child who clings

Projector

Lyrics

1
தந்தை தன் சிறு பாலனைகையேந்தித் தாங்குவான்;சீராட்டப் பெற்ற பாலகன்அபாயம் நினையான்.
2
அவ்வாறே என்னைத் தந்தையேகாப்பாற்றித் தாங்குவீர்;என் பலவீனம் நீங்கவும்கையேந்தி வருவீர்.
3
மாதாவின் நேச மடியில்சாய்ந்தாடும் குழந்தைதாயாரின் முகம் பார்க்கையில்மறக்கும் கிலேசத்தை
4
அவ்வாறே, நேச ரக்ஷகா,உம் அருள் முகத்தைநான் பார்க்க, ஸ்திரமாக்குவீர்என் விசுவாசத்தை.
5
தாய் தந்தை பக்கம் பாலரைஉட்கார வைக்குங்கால்,சந்தோஷித்துள்ளம் களிப்பார்பெற்றோரின் அன்பினால்
6
அவ்வாறே திருப் பாதத்தில்ஆனந்தம் அடைந்தேன்;மென்மேலும் அருள் நாதரேபேரன்பை ருசிப்பேன்
346A தந்தை தன் சிறு · Old Martyrs — Tamil Pamalai