பாமாலை · Hymn356
களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே
Rejoice in the Lord O let His Mercies
பல்லவி
கர்த்தர் நம் பட்சம்கர்த்தர் நம்மோடுகர்த்தர் சகாயர்யார் எதிர்க்க வல்லோர்?யார்? யார்? யார்?யார் எதிர்க்க வல்லோர்யார் வல்லோர்?
1
களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே;தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்;அவர் நமக்கு யாவிலும் எல்லாமேஎப்பாவம் பயம் நீக்குவார்.
↻ பல்லவி
2
திடனடைவோம், தீமை மேற்கொள்ளுவோம்கர்த்தாவின் வல்ல கரத்தால்;உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம்அவரே திடன் ஆகையால்
↻ பல்லவி
3
வாக்கை நம்புவோம், உறுதி மொழியாய்கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றேபூமி ஒழிந்தும் என்றும் உறுதியாய்நிலைக்கும், இது மெய் மெய்யே.
↻ பல்லவி
4
நிலைத்திருப்போம், கர்த்தரின் கட்டினில்,அதால் நித்திய ஜீவன் உண்டாம்பற்றும் ஏழையைத் தம் வல்ல கரத்தில்வைத்தென்றும் பாதுகாப்பாராம்.
↻ பல்லவி