பாமாலை · Hymn384
யுத்தம் செய்வோம்
Onward Christian Soldiers
1
யுத்தம் செய்வோம், வாரும்கிறிஸ்து வீரரே!இயேசு சேனை கர்த்தர்பின்னே செல்வோமே!வெற்றி வேந்தராகமுன்னே போகிறார்ஜெயக் கொடி ஏற்றிபோர் நடத்துவார்.யுத்தம் செய்வோம் வாரும்,கிறிஸ்து வீரரே!இயேசு சேனை கர்த்தர்பின்னே செல்வோமே!
2
கிறிஸ்து வீரர்காள், நீர்வெல்ல முயலும்பின்னிடாமல் நின்றுஆரவாரியும்!சாத்தான் கூட்டம் அந்ததொனிக்கதிரும்நரகாஸ்திவாரம்அஞ்சி அசையும்!
3
கிறிஸ்து சபை வல்லசேனை போன்றதாம்பக்தர் சென்ற பாதைசெல்கின்றோமே நாம்கிறிஸ்து தாசர் யாரும்ஓர் சரீரமேவிசுவாசம், அன்பு,நம்பிக்கை ஒன்றே.
4
கிரீடம், ராஜ மேன்மையாவும் சிதையும்கிறிஸ்து சபைதானேஎன்றும் நிலைக்கும்“நரகத்தின் வாசல்ஜெயங்கொள்ளாதே”,என்ற திவ்விய வாக்குவீணாய்ப் போகாதே.
5
பக்தரே, ஒன்றாககூட்டம் கூடுமேன்எங்களோடு சேர்ந்துஆர்ப்பரியுமேன்;விண்ணோர் மண்ணோர் கூட்டம்இயேசு ராயர்க்கேகீர்த்தி, புகழ், மேன்மைஎன்றும் பாடுமே.